2 நிமிடம் வீடியோ போதும்.. 234 தொகுதியையும் தூக்கிடுவோம்.. ரஜினிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்.!
2 நிமிடம் வீடியோ போதும்.. 234 தொகுதியையும் தூக்கிடுவோம்.. ரஜினிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்.!;
2 வீடியோ போதும் தலைவா.. அடிச்சு தூள் கௌப்பிடுவோம்.. போயஸ் கார்டனில் ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் கட்சி தொடங்கவேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் என்று இன்றும் அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லம் அருகில் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
ரஜினிகாந்த் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் அனைவரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனிடையே நேற்று கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியான நிலையில் களப்பணியாற்ற தாங்கள் இருப்பதாகவும் ரஜினி அரசியலுக்கு, என்றும் ரசிகர்கள் போயஸ் கார்டனில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் வருகை அதிகமாக இருப்பதால் போயஸ்கார்டன் இல்லத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போயஸ்கார்டன் சாலையின் நுழைவு வாயிலிலேயே ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேசும்போது, எவ்வளவோ தொழில்நுட்பங்கள் தற்போது வந்துள்ளது. வீட்டில் இருந்துகொண்டே பிரச்சாரம் செய்யலாம். தலைவரின் ஒரு 2 நிமிட வீடியோ இருந்தாலே போதும்.
234 தொகுதிகளையும் அடித்துத் தூக்கும் தில்லு எங்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினர்.
மற்றொரு மன்ற நிர்வாகி பேசும்போது, பூத் கமிட்டி மெம்பர்ஸ் ஒரு வீட்டிற்கு சென்றால் 25 போட்டோக்கள் கொடுக்கிறார்கள். தெருவே போட்டோ எடுத்து வந்து கொடுக்கிறார்கள். அதனால், தலைவர் கண்டிப்பாக மனதை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும். அவர், வந்தால் எல்லா வேலைகளையும் பார்க்க மக்கள் மன்றம் உறுதுணையாக இருக்கும். என்ற உற்சாகமுடன் கூறிவருகின்றனர்.
மீண்டும் போயஸ்கார்டனில் பரபரப்பான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.