25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
மலையாளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த 'யோதா' திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் மலையாள படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இயக்குனர் சஜிமோன் இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் படம் மலையன் குஞ்சு, படத்தின் தயாரிப்பாளர் பகத் ஃபாசிலின் தந்தை இயக்குனர் ஃபாசில். இந்த படத்திற்கு தான் பின்னனி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மலையாள படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.