250 கோடி ரூபாய்க்கு உரிமங்கள் விற்பனை - வசூல் கணக்கை துவங்கிய 'புஷ்பா' !
படம் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛புஷ்பா-தி ரைஸ்' படம் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை விற்பனை மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதுதவிர அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையும் அதிக விலைக்கு ஓ.டி.டி., தளம் ஒன்று கைப்பற்றியுள்ளதாகவும் அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.