3 ஏரியா ஆர்.ஆர்.ஆர் விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூன்று ஏரியாக்களின் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலியின் பான் இந்தியா படம் 'ஆர்.ஆர்.ஆர்', ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடித்துள்ள இப்படம் 5 மொழிகளில் வெறியாகிறது. ஜனவரி மாதம் பிரம்மாண்ட முறையில் வெளியாகும் இப்பட விநியோக உரிமையை தமிழகத்தினஃ முக்கிய 3 ஏரியாக்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அதில் கலந்துகொண்டு உதயநிதி பேசியதாவது, "சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இப்படம் வெளியாகும்" என தெரிவித்தார்.