கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த 3600 நடன கலைஞர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் உதவி செய்துள்ளார்.
கொரோனோ இரண்டாம் அலையால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதனால் நடன கலைஞர்கள் போன்ற சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடிகர் அக்ஷய் குமார் 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா வெளியிட்டுள்ளார். நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்ஷய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்ஷய் குமார் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.