பிரபல ஹாலிவுட் நடிகைக்கு 6வது திருமணம்!
பிரபல ஹாலிவுட் நடிகைக்கு 6வது திருமணம்!;
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1998ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
மீண்டும் கடந்த 2006ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரிடம் இருந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு சில மாதங்கள் தனிமையில் வசித்து வந்தார். இதன் பின்னர் விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்து விட்டனர்.
இதன் பின்னர் சமாதானம் செய்து கொண்டு மீண்டும் விளையாட்டு வீரரான ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார். அதுவும் சில வருடங்களிலேயே முடிந்து விட்டது. இதனிடையே கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ் 75, என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 12 நாட்களிலேயே விவாகரத்து பெற்றார். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாடிகார்ட் டான் ஹேஹர்ஸ்டை என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 6வது திருமணம் ஆவது நீடித்து இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.