ஒரே ஒரு வீடியோ போட்ட கீர்த்தி சுரேஷ்.. 70 லட்சம் பார்வையை கடந்து செல்கிறது.!

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்கின்ற வகையில், ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.;

Update: 2021-06-23 13:58 GMT

நடிகை கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தன்னை ஒரு விஜய் ரசிகையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் விஜய் ஓவியம் வரைந்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


 



இந்நிலையில், நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்கின்ற வகையில், ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுவரை இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் பேரும், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோவின் பார்வை நாளைக்குள் இரண்டு மடங்காகவும் வாய்ப்புள்ளது.

Similar News