கொரோனவுக்கு மத்தியில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. அதுவும் மேடையிலே வழங்கப்படும்.. ஆஸ்கர் குழு அறிவிப்பு.!

கொரோனவுக்கு மத்தியில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. அதுவும் மேடையிலே வழங்கப்படும்.. ஆஸ்கர் குழு அறிவிப்பு.!;

Update: 2020-12-03 07:21 GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகமே கடந்த சில மாதங்கள் முடங்கியதை அனைவரும் அறிவர். அது போன்று சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த ஆண்டு நடைபெறும் 93வது, ‘ஆஸ்கர்’ விருதுகள் வழங்கும் விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இல்லாமல், நேரடியாகவே விருதுகள் வழங்கப்படும்’ என்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் குழு கூறியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகள் எனப்படும், ‘அகாடமி’ விருதுகள், திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், தயாரிப்பாளர், நடிகைகள், இசையமைப்பாளர் போன்றவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.


அதே போன்று 93வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த வருடம் 2021, பிப்ரவரி மாதம் நடத்த முதலில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அந்த விழா, 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் நாள் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ‘டால்பி’ தியேட்டரில் இந்த விழா நடைபெறுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த விழா, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகிருந்தது. இந்நிலையில், அந்த தகவலை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் குழு நேற்று மறுத்துவிட்டது.

இது குறித்து, ஆஸ்கர் குழுவின் பிரதிநிதி ஒருவர் கூறியதாவது: வரும் 2021 ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கம்போல், நேரிடையாகவே விருதுகள் வழங்கப்படும். அதுவும் டால்பி தியேட்டரில் 3,400 இருக்கைகள் உள்ளன. விழாவின்போது எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற விவரங்களை பின்னர் வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News