தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி - சினிமாவை விட்டு விலக முடிவா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
தளபதி விஜய் சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் அரசியலில் பிரவேசம் செய்ய இருப்பதாகவும் சில வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான தளபதி விஜய் 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டு வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
'என் நெஞ்சில் குடியிருக்கும்' ரசிகர்கள் என்று அவர் ஒவ்வொரு முறை மேடையில் பேசும் போதும் அவர் கூறும் அந்த வார்த்தைக்காகவே கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். ரசிகர்கள் மத்தியில். அப்படி உச்சகட்ட புகழில் இருக்கும் தளபதி திடீரென சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் அடுத்த கட்டமாக தளபதி அரசியலில் பிரவேசம் செய்ய இருப்பது தான் என்பது போன்ற பேச்சுகள் இடம்பெறுகின்றன.
சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்காக விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் பல்வேறுபட்ட பரிசுகளை வழங்கி அசத்தியிருக்கிறார் தளபதி. அந்த விழாவில் பலரும் தளபதியை அரசியலுக்கு வருமாறு நேரடியாகவும் சூசகமாகவும் அழைப்பு விடுத்தனர். பாடல்கள் மூலமாகவும் கவிதைகள் மூலமாகவும் தளபதிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இவை அனைத்துமே தளபதியின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த கட்டமாக வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 - ல் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி இத்துடன் சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் கவனம் செலுத்துவார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.