23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனை திரைப்படம்
'கலைஞர் நகர்' என்ற திரைப்படம் 22 மணி 53 நிமிடத்தில் மொத்தமாக 23 மணி நேரத்தில் இயக்கி முடிக்கப்பட்டு சாதனைப்படுத்துள்ளது.
'பிதா' என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் 23 நிமிடத்தில் இயக்கிய சுகன் குமார் அடுத்து கதை திரைக்கதை எழுதி டைரக்டர் செய்துள்ள படம் 'கலைஞர் நகர்'. இந்த திரைப்படத்தை 22 மணி 53 நிமிடத்தில் இயக்கி முடித்து சாதனை படைத்துள்ளார். இந்த படத்தில் பிரஜின் நாயகனாகவும் ஸ்ரீ பிரியங்கா நாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங் ஸ்டன், ஐஸ்வர்யா" திருக்குறழி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் சுகன் குமார் கூறும் போது இந்த சிறிய படத்தை பிரமாண்டமாக எடுத்துள்ளோம். இந்த படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்துள்ளோம். மேடை நடன கலைஞர்களை மையப்படுத்தி உண்மை சம்பவம் கதையாக தயாராகியுள்ளது. படத்தில் பாடல், சண்டை , காமெடி என அனைத்து அம்சங்களும் உள்ளன. சிவராஜ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ்.