பாடல்கள் இல்லாத விஜய் படமா? - லோகேஷ் கொடுத்த அதிர்ச்சி தகவல்

விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Update: 2022-08-17 15:15 GMT

விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.


 



தற்பொழுது விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார், இது முடிந்தவுடன் தனது 67வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வசம் ஒப்படைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்காக லோகேஷ் கனகராஜ் புதுமையான முறையில் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கவிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



மேலும் இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படம் போல் பாடல் காட்சி இல்லாத படமாக வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடல் இல்லாத விஜய் படமா என்ற அதிர்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது!

Similar News