காதலர் தினத்தில் அட்லி மனைவி பதிவிட்ட ட்வீட்டர் பதிவு!

காதலர் தினத்தில் அட்லி மனைவி பதிவிட்ட ட்வீட்டர் பதிவு!

Update: 2021-02-14 17:13 GMT

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. இவர் மனைவி பிரியா அட்லி காதலர் தினத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம்  கொண்டாடப்படும் வகையில் நட்சத்திர தம்பதிகளும், நட்சத்திர காதலர்களும்,கோலிவுட் திரையுலகினர் அனைவரும் புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அட்லீ மனைவி பிரியா அட்லி அவரது ட்வீட்டர் பக்கத்தில் காதலர் தின பதிவை பதிவு செய்துள்ளார்.அந்த பதிவில் பிரியா அட்லி அவரது டுவிட்டர் பக்கத்தில் நீங்கள்தான் என்னுடைய ஒரே ஒரு உள்ளம். இன்றும் நாளையும் என்றும் நான் உங்களுடன் அன்புடன் இருப்பேன். எங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.

இந்த உலகம் முழுவதும் அன்பு, காதல் பரவட்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார்.இதேபோல் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் காதலர் தினத்தை கொண்டாடி புகைப்படத்தை பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News