15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. அமீர்கான், கிரண் ராவ் விவாகரத்து.!
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவுடன் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அந்த தம்பதிகளுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார்.;
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவுடன் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அந்த தம்பதிகளுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார்.
லகான் படம் மூலமாக அமீர்கான் மற்றும் கிரண் ராவ் சந்திப்பு நிகழ்ந்தது. இதன் பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆசாத் ராவ் கானை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:இந்த 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்நாள் அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம். எங்கள் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பில் மட்டுமே வளர்ந்துள்ளது.
தற்போது எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தைக் தொடங்க உள்ளோம். சில காலத்திற்கு முன்பு நாங்கள் ஒரு திட்டமிட்டு பிரிந்தோம். இப்போது இந்த ஏற்பாட்டை முறைப்படுத்த வசதியாக உண்கிறோம். தனித்தனியாக வாழ்வது இன்னும் ஒரு நீட்டிக்கப்பட்ட விதத்தில் நம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது ஆகும்.
மேலும், உங்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வேண்டும் என எங்கள் நலம் விரும்பிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.