பவன் கல்யாண் படத்தை ஒதுக்கிய பூஜா ஹெக்டே - ஏன்?

பவன் கல்யாண் படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Update: 2022-06-04 08:15 GMT

பவன் கல்யாண் படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகையாக விளங்குபவர் பூஜா ஹெக்டே, இவர் தெலுங்கில் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் 'பாவாடியுடே பகத்சிங்' என்ற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.




இந்த நிலையில் பூஜா ஹெக்டே படத்தில் இருந்து வெளியேறி உள்ளார், அதற்கு காரணம் என்ன என்ற தகவல்கள் கிடைத்துள்ளன காரணம் தமிழ் மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் பவன் கல்யான் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் தள்ளிக்கொண்டே இருப்பதால் இப்படத்திலிருந்து பூஜா ஹெக்டே ஒதுங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News