ராஜமௌலியில் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்கள் நடித்ததற்கு சமம் - மகேஷ் பாபுவின் பெருமை

'இயக்குனர் ராஜமௌலியில் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்கள் நடித்ததற்கு சமம்' என மகேஷ் பாபு பெருமை பொங்க கூறியுள்ளார்.

Update: 2022-08-09 12:43 GMT

'இயக்குனர் ராஜமௌலியில் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்கள் நடித்ததற்கு சமம்' என மகேஷ் பாபு பெருமை பொங்க கூறியுள்ளார்.




 


தற்பொழுது இயக்குனர் த்ரி விக்கிரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே மகேஷ்பாபு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் இது பற்றி தற்பொழுது மகேஷ் பாபு மௌனம் கலைத்துள்ளார்.




 

இந்த படம் பற்றி மகேஷ்பாபு கூறும் போது, 'இயக்குனர் ராஜமௌலியின் ஒரு படத்தில் நடித்தால் 25 படங்களில் நடித்ததற்கு சமம் அந்த படத்திற்காக உடல்ரீதியாக நிறைய தயாராக வேண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்' என கூறியுள்ளார்.

Similar News