விரைவில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர்.. ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் அனைவரின் கவனமும் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதுதான்.
தமிழ் சினிமாவில் அனைவரின் கவனமும் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதுதான்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியிடப்படும் என்றுதான், தற்போது வரை நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பல இடங்களில் அவரிடமே கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தல அஜித்தின் ரசிகர்களுக்கு விரைவில் இன்ப அதிர்ச்சி காத்துகொண்டு இருக்கிறது. ஆம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தயாராக உள்ளதாம். இந்த மோஷன் போஸ்டரை தல பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொல்லியுள்ளாராம்.
மேலும், இந்த போஸ்டரை நான் சொல்லும் வரை வெளியிட வேண்டும் என்று படக்குழுவுக்கு நடிகர் அஜித் கட்டளையிட்டுள்ளாராம். விரைவில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் காத்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.