வலிமை படம் எப்போது ரிலீஸ்.? அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.!
மே 1ம் தேதி, படத்தின் வெளியீடு தேதியை அறிவிக்கலாம் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.;
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் பற்றிய ஒரு சிறப்பான தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் வலிமையை இயக்கி வருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் வலிமை படத்திலும் நல்ல கதையம்சம் இருக்கும் என்பதால் பத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
வலிமை படத்தில் ஹீமா குரோஷி கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக்கேயா வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில், கொரோனா காலத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் தொடங்கப்பட்டது.
அந்த பணிகளும் நேற்று அஜித் முடித்து கொடுத்தாக கூறப்படுகிறது. அநேகமாக மே 1ம் தேதி, படத்தின் வெளியீடு தேதியை அறிவிக்கலாம் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனால் மே முதல் வாரத்தில் கடைசி நாளில்கூட படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்காக லட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.