ருத்ரதாண்டவம் படத்தை பார்த்து பாராட்டிய 'தல' மனைவி ஷாலினி !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவருடைய மனைவி ஷாலினி அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் நடித்துள்ள ருத்ரதாண்டவம் படத்தை நேற்று பார்த்து பாராட்டியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.;

Update: 2021-10-02 09:35 GMT
ருத்ரதாண்டவம் படத்தை பார்த்து பாராட்டிய தல மனைவி ஷாலினி !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவருடைய மனைவி ஷாலினி அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் நடித்துள்ள ருத்ரதாண்டவம் படத்தை நேற்று பார்த்து பாராட்டியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.


ரிச்சர்ட் நடித்துள்ள படத்தை தனது மகனுடன் பார்த்த ஷாலினி அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த படத்தை படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஷாலினி படக்குழுவை வாழ்த்தியதாக நடிகர் அஜித்தின் ரசிகர்கள் முகநூல் பக்கத்தில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் தல அஜித்குமார் மனைவி வந்து படத்தை பார்த்து விட்டு சென்றதால் அவரது ரசிகர்கள் திரையரங்குக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதை பார்க்க முடிகிறது. படம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Mohan G Facebook

Tags:    

Similar News