எனக்கு கொரோனா.. இன்ஸ்டாகிராமில் தகவலை வெளியிட்ட நடிகை ஆலியா பட்.!
அனைவருக்கும் வணக்கம், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
இந்தி திரையுலகின் பிரபல நடிகையாக இருப்பவர் ஆலியா பட், இவர் மும்பையில் வசித்து வருகுறார். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இதனிடையே ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
எனது மருத்துவர் ஆலோசனையின்படி, அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.