எனக்கு கொரோனா தொற்று உறுதி.. நடிகர் அதர்வா பரபரப்பு ட்விட்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்களையும் தொற்று ஆட்டி படைத்து வருகிறது.

Update: 2021-04-18 06:07 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்களையும் தொற்று ஆட்டி படைத்து வருகிறது. அந்த வகையில், நடிகர்கள் சோனு சூட், பவன் கல்யாண், செந்தில், அக்சய் குமார், அமீர் கான், மாதவன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.




 

இந்நிலையில், நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:


 



கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். விரைவில் குணமடைந்து பணியை தொடங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் அதர்வாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News