சிரஞ்சீவியை கவர்ந்த 'விக்ரம்' - கமல், லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் மாபெரும் விருந்து

கமல்ஹாசனுக்கு தன் வீட்டில் விருந்து அளித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

Update: 2022-06-12 08:30 GMT

கமல்ஹாசனுக்கு தன் வீட்டில் விருந்து அளித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.




லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் இப்படத்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வியந்து பாராட்டி தனது வீட்டிற்கு கமலஹாசனை அழைத்து விருந்து அளித்துள்ளார்.




ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த இந்தி நடிகர் சல்மான் கானும் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியதாவது, 'எனது அன்பான பழைய நண்பர்களை அழைத்து நேற்று இரவு என் வீட்டில் கௌரவித்து கொண்டாடுவதன் மூலம் மகிழ்ச்சி 'விக்ரம்' படத்தில் அற்புதமான வெற்றிக்காக இந்த விருந்து' என குறிப்பிட்டுள்ளார். விருந்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார்.

Similar News