ஜெயலலிதா வீடு அருகே புதிய வீடு கட்டும் நடிகர் தனுஷ்.. பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.!
ஜெயலலிதா வீடு அருகே புதிய வீடு கட்டும் நடிகர் தனுஷ்.. பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.!;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் தெருவில் நடிகர் தனுஷ் புதிய வீடு கட்டுவதற்காக இன்று பூமி பூஜை நடத்தினார். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் முதலில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று உச்ச நட்சத்திர வரிசையில் உள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் புதிய வீடு கட்டுவதற்காக போயஸ்கார்டனில் இடம் வாங்கியுள்ளார். அதுவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லம் அருகே தனுஷ் வீடு கட்டுகிறார். இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போயஸ்கார்டனில் மிகவும் முக்கிய பிரமுகர்கள் வீடு கட்டி குடியேறி வருகின்றனர். எப்போதும் போயஸ்கார்டன் என்றாலே ஜெயயலிதா பெயர்தான் நினைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.