பிக்பாஸ் பிரபலம் நடித்த படத்தின் பாடலை வெளியிட நடிகர் தனுஷ்!

பிக்பாஸ் பிரபலம் நடித்த படத்தின் பாடலை வெளியிட நடிகர் தனுஷ்!;

Update: 2021-02-26 16:49 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்-4 கடந்த மாதம் முடிவற்ற நிலையில் அதில் ஆரி வெற்றி பெற்றார் என்பதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களுக்கு திரையுலகில் நல்ல வாய்ப்பு  கிடைத்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.அதேபோல் பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.


 

அந்த வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் திரைப்படம் 'ஓமண பெண்ணே' இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் புரமோஷன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் தனுஷ் அவரது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் 'ஓமண பெண்ணே' படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'கண்மூடி கிடக்கானே பையா' என்று தொடங்கும் இப்பாடலை சிந்தூரி பாடியுள்ளார் என்பதும்  இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அன்புதாசன், அஸ்வின்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Full View

Similar News