விரைவில் கர்ணன் டீசர்: ட்வீட்டரில் தகவல் வெளியிட்ட நடிகர் தனுஷ்.!
நடிகர் தனுஷ் நடித்த வரும் கர்ணன் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வகையில் படத்தின் டீசர் விரைவில் வரும் என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷ் அறிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடித்த வரும் கர்ணன் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வகையில் படத்தின் டீசர் விரைவில் வரும் என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷ் அறிவித்துள்ளார்.
'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து 'கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒளித்துக்கொண்டிருக்கிறது. படத்தின் டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.