தீபாவளி விருந்தாக நடிகர் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல் ரிலீஸ்.!

தீபாவளி விருந்தாக நடிகர் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல் ரிலீஸ்.!

Update: 2020-11-13 17:00 GMT

நடிகர் தனுஷ் தற்போது தமிழ்   மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 'ஜகமே தந்திரம்' படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலிஸுக்காக காத்திருக்கிறது.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

  ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 'ரகிட ரகிட' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இன்னிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலாக 'புஜ்ஜி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலை அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் சேர்ந்து பாடியுள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் இப்பாடலுக்கு அதிக வரவேற்பையும் தாறுமாறாக இருக்கின்றது என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.பின்னர் இப்பாடல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

Similar News