பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!

இவர் 65 படங்களில் நடித்துள்ளார். இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, மற்றும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Update: 2021-07-07 03:53 GMT

உடல்நலக்குறைவு காரணாக சிகிச்சை பெற்று வந்த மிகவும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் 98, இன்று உயிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜூன் 30ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மும்பை, இந்துஜா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் 65 படங்களில் நடித்துள்ளார். இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, மற்றும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Similar News