நடிகர்களை கூத்தாடி எனவும்.. நடிகர் சங்கத்தை கூத்தாடி சங்கம் என அழைக்கலாமா.. கார்த்திக்கு நடிகை காயத்ரி ரகுராம் பளார்.!

மத்திய அரசை ஒன்றி அரசு என்று அழைத்த நடிகர் கார்த்திக்கிற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2021-07-07 09:29 GMT

மத்திய அரசை ஒன்றி அரசு என்று அழைத்த நடிகர் கார்த்திக்கிற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர்.


இதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது போன்று அழைப்பதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது திமுகவினர் கூறுவது போன்று மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. 


இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுமார் நடிகர் கார்த்திக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News