நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.!
சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை நடிகர் கமல்ஹாசன் செலுத்திக் கொண்டார்.;
சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை நடிகர் கமல்ஹாசன் செலுத்திக் கொண்டார்.
கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2ம் கட்ட தடுப்பூசி பணியானது நேற்று முதல் துவங்கியது. அதில் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், துணை ஜனாதிபதி உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை நடிகர் கமல்ஹாசன் செலுத்திக்கொண்டார். அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.