சின்ன வயதில் ஏறமுடியாமல் போன 'புளியமரத்தில்' ஒருவழியாக ஏறிவிட்டேன்.. நடிகர் கார்த்தி.!

நடிகர் கார்த்தி புளியமரத்தில் ஏறிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.;

Update: 2021-03-13 07:19 GMT

நடிகர் கார்த்தி புளியமரத்தில் ஏறிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.




 


இந்நிலையில், தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள கார்த்தி ஜாலியாக விளையாடி வருகிறார். தற்போது அவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


 



அதில் ''நான் என் சின்ன வயசு முழுவதும் பலமுறை ஏற முயற்சித்த புளியமரத்தில் ஒருவழியாக இன்று உள்ளேன்" என்று புளியமரம் ஏறிய குதூகலத்துடன் மரத்தில் தொங்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Similar News