நடிகர் கார்த்திக் மூச்சுவிடுவதில் சிரமம்.. மருத்துவமனை வட்டாரம் தகவல்.!

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.;

Update: 2021-04-09 11:16 GMT

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. கார்த்திக்கு கடந்த மாதம் 21ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.




 


இதன் பின்னர் உடல்நலம் தேறியவுடன் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனிடையே பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது அவருக்கு மூச்சுத்திணறல் எற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதன் பின்னரும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றது.

Similar News