நயன்தாரா தயாரித்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்திக்!

நயன்தாரா தயாரித்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்திக்!

Update: 2021-02-09 19:17 GMT

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் 'கூழாங்கல்' என்ற திரைப்படத்தை எடுத்தனர்.இப்படம் சர்வதேச டைகர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது என்பதும், நேற்றைய நிலையில்  விக்னேஷ் சிவன்  அவரது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச விருது பெற்றதை பகிர்ந்தார்.

அந்த வகையில் இதை அறிந்த நடிகர் கார்த்திக் அவரது ட்விட்டர் பக்கத்தில் டைகர் விருது கிடைத்ததை கேள்விப்பட்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், நம்முடைய திரையுலகைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச விருதினை திறமையின் மூலம் பெறுவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை நாம் அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரஸ் ஆகி வருகிறது.நயன்தாரா, கார்த்திக் ஆகிய இருவரும் காஷ்மோரா என்ற படத்தில்  நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News