சூர்யா உடல்நலம் குறித்து நடிகர் கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பு..!

சூர்யா உடல்நலம் குறித்து நடிகர் கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பு..!;

Update: 2021-02-11 18:41 GMT

முன்னணி நடிகரான நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என அவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இதைப் பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


 

அந்தவகையில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்திக் சூர்யாவின் உடல்நலம் குறித்து  டுவிட் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியது: சூர்யா அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றோம். சில நாட்கள் அண்ணன் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு என்னால் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து சூர்யாவின் ரசிகர்கள் அண்ணா விரைவில் குணமடைந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

Similar News