நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி!

நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2021-04-03 05:54 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில், மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Similar News