எப்படி இப்படி ஒரு படம் எடுத்தீர்கள்? - விக்ரம் குறித்த ஆச்சர்யத்தில் மகேஷ் பாபு
'விக்ரம்' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
'விக்ரம்' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி 400 கோடி அளவு வசூல் செய்து மெகா ஹிட் ஆன 'விக்ரம்' திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விக்ரம் படத்துக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
இந்நிலையில் விக்ரம் படத்தை பற்றி தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, 'விக்ரம்' பிளாக்பஸ்டர் சினிமா நவீன காலத்தில் மிகச்சிறந்த படைப்பு, இந்த படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இயக்குனர் லொகேஷ கனகராஜ் அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன் 'விக்ரம்' மெய்மறக்க செய்யும் வளர்ச்சி பூர்வமான படம் சகோதரர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள்' என தெரிவித்துள்ளார்.