கொரோனா தொற்றுக்கு நடிகர் மாறன் உயிரிழப்பு.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறன் 48, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2021-05-12 03:46 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறன் 48, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு விஜய் நடித்த கில்லி படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன். இவர் ஆதிவாசி என்ற பெயரில் நடித்தார். அதற்கு அடுத்து தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கானா பாடல்களையும் பாடியுள்ளார்.


 



இந்நிலையில், செங்கல்பட்டில் வசித்து வந்த துணை நடிகர் மாறன் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மாறன் நேற்றிரவு உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பல்வேறு திரைப்பட நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Similar News