நடிகர் நகுல் குழந்தையின் புகைப்படம் வைரல்! குவியும் லைக்குகள்!

நடிகர் நகுல் குழந்தையின் புகைப்படம் வைரல்! குவியும் லைக்குகள்!

Update: 2021-02-13 18:57 GMT

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ' பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர். அதன்பின் கதாநாயகனாக காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்த கோட்டை உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கல்லூரி காதலியான ஸ்ருதிபாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு 'அகிரா' என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் பிறந்து பல மாதங்களாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த இவர் தற்போது க்யூட் குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த குழந்தை பார்ப்பதற்கு நகுல் போலவே இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News