உத்வேகத்துடன் மீண்டும் அரசியில் இறங்கும் பவன் கல்யாண் - அக்டோபர் முதல் மெகா பேரணி
தன்னுடைய அரசியல் பிரச்சார பயணத்திற்காக 8 புதிய கருப்பு கலர் ஸ்கார்பியோ கார் வாங்கியுள்ளார் நடிகர் பவன் கல்யாண்.
தன்னுடைய அரசியல் பிரச்சார பயணத்திற்காக 8 புதிய கருப்பு கலர் ஸ்கார்பியோ கார் வாங்கியுள்ளார் நடிகர் பவன் கல்யாண்.
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முன்னணி நடிகர் பவன் கல்யாண், இவர் கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் மீண்டும் உத்வேகத்துடன் தனது அரசியல் பணியை துவங்க இருக்கிறார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் இவர் மெகா பிரச்சார பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார், அதற்காக இவருடைய பாதுகாப்பிற்காக 8 புதிய கருப்பு நிற ஸ்கார்பியோ கார் வாங்கியுள்ளார். இந்த ஸ்கார்பியோ கார் பவன் கல்யாணின் பாதுகாப்பிற்காக செல்லப்படும் என அறிவிக்கப்படுகிறது.