சூப்பர் ஸ்டார் ஆசிர்வாதத்துடன் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு கிளம்பிய ராகவா லாரன்ஸ்

'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன் தனது குருநாதர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Update: 2022-07-16 02:16 GMT

'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன் தனது குருநாதர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.


 



2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகி வருகிறது லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.



இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூர் மாநகரத்தில் துவங்கவுள்ளது. படப்பிடிப்புக்கு கிளம்பி செல்வதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்று அதன் பிறகு படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும், தகவலையும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Similar News