கொரோனா நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி.!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.;
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை காரணமாக, மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், மருந்து பொருட்களுக்கு தேவையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு நிதி வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் திரையுலகினரை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.