'அண்ணாத்த' படப்பிடிப்பு நிறைவு.. சென்னை திரும்பும் ரஜினிகாந்த்?
ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.;
ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.
அங்கு முடிக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்த ஐதராபாத்தில் இருந்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து ரஜினி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.