அமெரிக்காவில் ஸ்டைலா நடந்து செல்லும் நடிகர் ரஜினிகாந்த்.!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா, ராசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.;
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா, ராசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனிடையே வருடத்திற்கு ஒரு முறை தனது உடல்நிலையை ரஜினி பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எங்கேயும் வெளியில் செல்லாமல் சென்னையிலேயே இருந்தார். இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் சிக்கல் நீடித்தது.
இதனிடையே மத்திய அரசிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார். அதன்படி அவருக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது. இதனால் 19ம் தேதி ரஜினி அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் மயோ கிளினிக்கிலிருந்து வெளியே நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரஜினி தொப்பி மற்றும் டிஷர்ட் அணிந்தபடி மிகவும் இளமை தோற்றத்தில நடந்து செல்வது போன்று ஸ்டைலாக நடந்து செல்கிறார்.