அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.!
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க செல்வதற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அங்கு ரோசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. இதனை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் அமெரிக்காவில் 18 நாட்கள் ஓய்வு எடுத்திருந்தார். அப்போது ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்தார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.