நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும்.. ராமராஜன் எடுக்கப்போகும் புது படம்.!
பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அது போன்று நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டராகவே இருப்பேன்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்துள்ளேன். 5 படங்களை இயக்கி உள்ளேன். நான் நடித்த மற்றும் இயக்கிய 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே அமைந்திருந்தது.
நான் தற்போது எடுக்க உள்ள படமும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கதையம்சம் கொண்டதாக இருக்கும். எனக்கு எத்தனை கோடி கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அது போன்று நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டராகவே இருப்பேன்.
தற்போது தன்னிடம் ஒரு கதை உள்ளது. அதில் நடிப்பதற்கு விஜய்சேதுபதி பொருத்தமாக இருப்பார் என கூறினார்.