நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு வெளியான பேண்டு மாஸ்டர் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.என்.ஆர். மனோகர். அதன் பின்னர் கோலங்கள் படத்தின் மூலமாக வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் நடிப்பின் வெளியான தென்னவன் படத்திற்கு வசனம் எழுதியது மட்டுமின்றி நடிகர் விவேக்குடன் ரவுடி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கடந்த 2009ம் ஆண்டு நகுல், சுனைனா நடிப்பில் வெளியான மாசிலாமணி படத்தையும் இயக்கியுள்ளார். அதனையடுத்து வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மனோகர் திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆர்.இளங்கோவனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: Pinkvilla