தந்தை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றார் நடிகர் சல்மான்கான்.!

கொரோனா வைரஸ் தொற்றால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றுக்கொண்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.;

Update: 2021-05-06 12:43 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றுக்கொண்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதலில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது. அப்போது ஏழைகள் முதல் பல்வேறு துறைகளில் இருந்தவர்கள் வரை பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு எதிராக பணம் மற்றும் உணவுகளை வழங்கி வந்தனர்.




 


அதில் நடிகர் சல்மான்கான் கடந்த ஆண்டு 25,000 சினிமா தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார். இதனிடையே தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளார்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு உணவு மற்றும் உதவிகளை நடிகர் சல்மான்கான் செய்து வருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் தந்தையை இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவரின் கல்வி மற்றும் இதர செலவை சல்மான்கான் ஏற்றுள்ளார்.

Similar News