செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறை தண்டனை.!

மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான 5 வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2021-04-07 07:06 GMT

7 காசோலை மோசடி செய்த குற்றத்திற்காக நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா உள்ளிட்ட இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றனர். அதனை திருப்பி செலுத்துவதற்காக ஏழு காசோலைகள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் திருப்பி செலுத்தியுள்ளனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இதனிடையே வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.




 


இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பங்குதார்ர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான 5 வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ராதிகா முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News