ஊழலற்ற கட்சி என்பதால் பா.ஜ.க.வில் இணைந்தேன்.. நடிகர் செந்தில்.!

நகைச்சுவை நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் அருகே இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951ம் ஆண்டு பிறந்தார். இதன் பின்னர் 13 வயதில் சென்னைக்கு சென்று பல்வேறு வேலைகளை செய்து வந்தார்.

Update: 2021-03-11 08:00 GMT

நகைச்சுவை நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் அருகே இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951ம் ஆண்டு பிறந்தார். இதன் பின்னர் 13 வயதில் சென்னைக்கு சென்று பல்வேறு வேலைகளை செய்து வந்தார்.

இதனையடுத்து சினிமாவில் மெல்ல கால்பதித்து, இன்று வரை நகைச்சுவை ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து செந்தில் நடித்த படங்கள் ஏராளம்.

இந்நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக தலைவர் எல்.முருகன், தமிழக மேலிட பொருப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இதனிடையே நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: "ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வந்துள்ளேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் தனக்கு உரிய இடம் கிடைத்தது. இதனிடையே அவரது மறைவுக்கு பின்னர் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை. இதனால் நல்ல கட்சியில் சேர வேண்டும் எனபதற்காக பாஜகவில் இணைந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News