நடிகர் தவசிக்கு உதவி செய்த நடிகர் சிம்பு - குவியும் பாராட்டுக்கள்.!

நடிகர் தவசிக்கு உதவி செய்த நடிகர் சிம்பு - குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-11-18 16:40 GMT

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்காக நடிகர் சிம்பு 1 லட்சம் ரூபாய் பண உதவி அளித்துள்ளார்.நடிகர் தவசி கொம்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தவசி தற்போது முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவி அளித்து வருகின்றனர்.

  இதனை அறிந்த பல பிரபலங்களான  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25,000 நிதியுதவி வழங்கினார்.  நடிகர் சூரி தவசிக்கு ரூ. 20,000 மற்றும் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்குவதாக கூறினார்.

இன்னும் பலர்  தெரிந்தும் தெரியாமலும் உதவி செய்து வருகின்றனர்.இதில் குறிப்பாக சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் 1 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.மேலும் நடிகர் சௌந்தராஜன் அவர்களும் ரூ. 10,000 நிதியுதவி வழங்கினார்  என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்காக பலரும் விரைவில் குணமடைய வேண்டி  தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News