நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' படத்தின் புதிய அப்டேட்.!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வரும் ‘டான்’ படத்தின் சண்டைக் காட்சிகள் நிறைவடைந்திருப்பதாக அப்படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் அப்டேட் செய்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வரும் 'டான்' படத்தின் சண்டைக் காட்சிகள் நிறைவடைந்திருப்பதாக அப்படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் அப்டேட் செய்துள்ளார்.
டான் படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், காமெடி நடிகர் சூரி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட திரைப்பிரமுகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை எஸ்.கே.தயாரிப்பு நிறுவனமும், லைகா தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் நிறைவுபெற்றுள்ளதாக சண்டைக் காட்சி இயக்குநர் விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்து வருவதை காண முடிகிறது.