கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் சூர்யா.. தம்பி கார்த்தி ட்வீட்.!
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் சூர்யா.. தம்பி கார்த்தி ட்வீட்.!;
நடிகர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது தம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யா வீடு திரும்பியதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.